அரசியல்

ஜாதியின் பெயரால் பெண்களை பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்

namo
50 / 100

ஜாதியின் பெயரால் பெண்களை பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார் !

பிலாஸ்பூர் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் ஓபிசி துணை ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி மீது கடும் எதிர்ப்புத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சாதியின் பெயராலும், பொய்களைப் பரப்புவதன் மூலமும் பெண்களைப் பிரிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் பிஜேபியின் ‘பரிவர்தன் யாத்திரை’யின் முடிவைக் குறிக்கும் வகையில் ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தன்னை வெறுக்கிறது என்றும், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரைத் துஷ்பிரயோகம் செய்வதை காங்கிரஸ் நிறுத்தவில்லை என்றும் மேலும் தனது சொந்த OBC பின்னணியை பற்றியும் வலியுறுத்தினார்.

“மோடி என்ற குடும்பப்பெயர்” பற்றி ராகுல் காந்தி தெரிவித்த மோசமான கருத்துக்காக குஜராத் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது, இன்று உச்சநீதிமன்றம் அந்த தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனதால் தான் காங்கிரஸ் கட்சி அவரை விரும்பவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி “மோடி” பெயரால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் தவறாக சித்தரிக்கின்றது.

பாஜக, மாநிலத்தில் எந்த ஒரு முதல்வர் வேட்பாளரையும் முன்னிறுத்தாது கட்சித் தொண்டர்களிடம் தனக்கு ஒரே ஒரு தலைவர் மற்றும் ஒரே ஒரு வேட்பாளர் “தாமரை” என்பதை தெளிவாக கூறினார்.

நாம் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் இதயத்தையும் வெல்ல வேண்டும், மக்கள் ஒவ்வொரு திட்டத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களில் சிக்கித் தவிக்கின்றனர் அதனால் மக்கள் ஊழல் காங்கிரஸ் அரசாங்கத்தை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் மற்றும் அதற்குள் OBC உள் ஒதுக்கிட்டுக்காண எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை எதிர்க்க அவர்கள் ஜாதியின் பெயரால் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தாலும் பெண்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பிரதமர் காங்கிரஸ் சார் கோபத்தில் மூழ்கி உறக்கத்தை இழந்துள்ளனர் அதனால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் பயத்தின் காரணமாக அவர்கள் புதிய விளையாட்டுகளை விளையாட ஆரம்பிக்கின்றனர். அவர்கள் எங்கள் சகோதரிகளிடையே பிளவை ஏற்படுத்த விரும்புகின்றனர் ஏனென்றால் நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்களின் ஆட்டம் முடிந்து விடும்.

ஜாதியின் பெயரால் பெண்களை பிளவுபடுத்தும் வகையில் பல்வேறு உத்திகளை கையாளுகின்றனர்.

சத்தீஸ்கரில் பெண்களுக்கு இந்த சட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை  கூற நான் விரும்புகின்றேன், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அவர்களின் பொய்களில் வீழ்ந்து விடாதீர்கள் ஒற்றுமையாக இருங்கள். “உங்கள் ஆசிர்வாதங்களை எனக்காக வைத்திருங்கள் கனவுகள் அனைத்தையும் மோடி  நிறைவேற்றுவார்” என்று அவர் கூறினார்.

பெண்களிடம் உள்ள ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு காரணமாகவே காங்கிரஸ் உட்பட  எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை ஆதரித்தனர். இரண்டு AIMIM எம்பிக்கள் மட்டுமே எதிர்த்தனர்.

OBC, தலித்துகள் மற்றும் பழங்குடியினரை காங்கிரஸ் வெறுப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், குடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்வதை எதிர்த்ததாகவும், பின்னர் முதல் பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முக்கு மிக உயர்ந்த அரசியல் அமைப்பு பதவியை ஆளும் கட்சி தேர்வு செய்ததையும் எதிர்த்ததாக கூறினார்.

முர்மு மீதான காங்கிரஸின் எதிர்ப்பு எந்த சித்தாந்த அடிப்படையிலும் இல்லை, அதனால் தான் காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் முர்முவுக்கு எதிராக பாஜகவில் இருந்து வந்த ஒருவரை பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்பட்டார்,  அவர் அவர்களின் சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

எந்த பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினரும் எழுச்சி பெறுவதை பார்க்க முடியாது என்பது பழைய காங்கிரஸ் மனப்பான்மை, அது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு தலைவணங்குபவர்களை மட்டுமே ஆதரிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

பாஜகவைப் பொறுத்தவரை, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு சமூக நீதியே வழி என்று அவர் வலியுறுத்தினார். சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசு, “மோடி மற்றும் மோடியின் திட்டங்களை” விரும்பாததால், ஏழைகளுக்கு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் குழாய் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் செய்து வருகிறது.

இந்தத் திட்டங்களால் மாநில அரசு தனது பாக்கெட்டுகளில்  பணத்தைப் பெற முடியாததால், அவற்றைச் செயல்படுத்த அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

 

Author

Author

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

road issue jpg
Fact Check அரசியல்

உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா…? என்ன செய்ய வேண்டும்…? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும்…?

பழைய தார் சாலையை புதுப்பிக்கும் முறை : பழைய சாலைகளை மில்லிங் செய்து அகற்றப்பட்டு (அகழ்ந்து) எடுத்த பின்னர் தான் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்க
14401bb88f72a612acf60a220490c4dd1671373088390502 original
மக்கள் கருத்து அரசியல் இந்தியா/ பாரதம்

TN BJP Leader Annamalai-2024 தேர்தலில் அண்ணாமலை சாதிப்பாரா ?

50 / 100 Powered by Rank Math SEO   அ.தி.மு.க., பா.ஜ., வீழ்ந்ததற்கு காரணம் அண்ணாமலை என்றால் அவரை  ஏன் மத்திய பாஜக தலைமை