விவசாயம்

வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்

agrisubsidy jpg
56 / 100

வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய உதவிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம்

  • இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைந்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லுக்கு விதை விநியோக மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோ ரூ.10 வழங்கப்படுகிறது.
  • இயந்திர நடவுமுறையை பிரபலப்படுத்துவதில் ஹெக்டேருக்கு ரூ. 3000, விதை உற்பத்தி மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.5  வழங்கப்படுகிறது.
  • சிறுதானிய விதை உற்பத்தி மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.10-ம், உயர் விளைச்சல் விதை விநியோக மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.15-ம், நுண்ணூட்டக் கலவை விநியோகத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.500-ம் வழங்கப்படுகிறது.
  • பயறுவகையில், நடவுமுறை துவரை சாகுபடி ஊக்குவிப்பு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.2,500-ம், டீஏபி கரைசல் தெளித்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ.650-ம், வரப்பு பயிராக பயறு வகை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.100-ம், விதை உற்பத்தி மானியம் கிலோவுக்கு ரூ.15-ம் வழங்கப்படுகிறது.
  • எண்ணெய்வித்து இயக்கத்தில் விதைப்பு இயந்திரம் மூலம் மணிலா விதைக்க ஹெக்டேருக்கு ரூ.1000, திரவ உயிர் உரம் விநியோகத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.150, மணிலா பயிர் வளர்ச்சி ஊக்கி பரவலாக்குதல் திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.1,300-ம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • கரும்புத் தோகை நில போர்வை மூலம் மண்வள ஊட்டமேற்றுதல், இரும்பு சல்பேட் இடுதல் திட்டத்தில் கரும்பு தோகை உரித்து நில போர்வை அமைத்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2,500-ம், இரும்பு சல்பேட் அல்லது ஃபெர்ரிக் சல்பேட் இடுதலுக்கு ஹெக்டேருக்கு ரூ.500-ம் வழங்கப்படுகிறது.
  • தென்னங்கன்று விநியோகத்தில் நெட்டை கன்றுக்கு ரூ.15-ம், நெட்டை குட்டைக்கு கன்றுக்கு ரூ.25-ம், குட்டை நெட்டைக்கு கன்றுக்கு ரூ.50-ம் மானியம் உண்டு.
  • தேசிய எண்ணெய்வித்து, எண்ணெய் பனை இயக்கம்: விதைக் கன்றுகள் விநியோகத்துக்கு ரூ.8 ஆயிரமும், முதல் வருட நடவு பராமரிப்புக்கு ரூ.4 ஆயிரமும், 2-ஆம் வருட நடவு பராமரிப்புக்கு ரூ.4 ஆயிரமும், 3-ஆம் வருட நடவு பராமரிப்புக்கு ரூ.4 ஆயிரமும், 4-ஆம் வருட நடவு பராமரிப்புக்கு ரூ.4 ஆயிரமும் (ஹெக்டேருக்கு) மானியம் வழங்கப்படுகிறது.
  • முதல் வருட எண்ணெய்பனையில் ஊடு பயிரிட ரூ.3 ஆயிரம், 2-ஆம் வருட எண்ணெய் பனை சாகுபடியில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம், 3-ஆம் வருட எண்ணெய் பனை சாகுபடியில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம் (ஹெக்டேருக்கு) வீதம் மானியம் உண்டு.
  • ஆதார விதை உற்பத்திக்கு 15 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.10-ம், சான்று விதை உற்பத்திக்கு கிலோவுக்கு ரூ.10-ம், சான்று விதை விநியோகத்துக்கு 50 சதவீதம் அல்லது கிலோவுக்கு ரூ.12 மானியம் வழங்கப்படுகிறது. பெருவிளக்கப் பண்ணை அமைத்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.

விதை கிராமத் திட்டம்

சான்று விதை விநியோகத்துக்கு நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.10-ம், சிறுதானியத்துக்கு கிலோவுக்கு ரூ.15-ம், பயறுவகைக்கு கிலோவுக்கு ரூ.25-ம், எண்ணெய்வித்துக்கு கிலோவுக்கு ரூ.12-ம் மானியம் உண்டு.

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் (பயறு வகை)

  • 15 ஆண்டுகளுக்குள் வெளியிட்ட ரகங்கள் மட்டும் சான்று விதை விநியோகத்துக்கு கிலோவுக்கு ரூ.25-ம்
  • தொகுப்பு பயறுவகை தொழில்நுட்ப சாகுபடி செயல்விளக்கத்துக்கு ஹெக்டேருக்கு ரூ. 4000.
  • ஊடுபயிர் பயறுவகை தொழில்நுட்ப சாகுபடி செயல்விளக்கத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500-ம் மானியம் அளிக்கப்படுகிறது.

Author

Benqu Support

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

dryland jpg
விவசாயம்

தரிசு, களர், உவர் நிலங்களுக்கு மானிய உதவி

67 / 100 Powered by Rank Math SEO ஒரு சில கிராமங்களில், சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன.
dairyfarm
விவசாயம்

பால் பண்ணை வணிகம் எப்படி வெற்றி பெறுகிறது ?

55 / 100 Powered by Rank Math SEO பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய