ஆரோக்கியம்

Too Much Sugar Affect Your Body – அதிகப்படியான சர்க்கரை 100% உங்கள் உடலை பாதிக்கிறது ?

81 / 100

Too Much Sugar Affect Your Body

அதிகப்படியான சர்க்கரை உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது ?

அதிகப்படியான சர்க்கரையை (Too Much Sugar) உட்கொள்வது உங்களுக்கு நல்லதல்ல என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இருப்பினும் ஒருவேளை நீங்கள் இன்னும் அதை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதே !

அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 270 கலோரிகள் சர்க்கரையை உட்கொள்கிறார்கள் அதாவது ஒரு நாளைக்கு சுமார் 17 டீஸ்பூன்கள். ஆனால் ஒரு நாளைக்கு 12 டீஸ்பூன் அல்லது 200 கலோரிகள் தான்  இப்படி  அதிகமாக பயன்படுத்துவதால் தான் அவர்கள் உடல் பருமனாக  காணப்படுகின்றனர்.

கூல்ட்ரிங்க்ஸ்,  சாக்லேட்டுகள், பேக்கிங் பொருட்கள் மற்றும் இனிப்பு பால் ஆகியவை சேர்க்கப்பட்ட சர்க்கரையின் முக்கிய ஆதாரங்களாகும். நீங்கள் கடைகளில் வாங்கும் பல்வேறு பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் என்ன அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக  அவர்கள் குறிப்பிடுவதில்லை மாறாக வேறு பெயர்களில் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  

எடுத்துக்காட்டாக :

நீங்கள் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்குகிறீர்கள் என்றால் அதன் பின்பக்கம் அந்த பிஸ்கட் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னென்ன என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த இடத்தில்  நன்றாக கவனித்தீர்கள் என்றால் மைதா  பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை  நேரடியாக குறிப்பிட மாட்டார்கள்  மாறாக Refined Wheat எனக் குறிப்பிட்டு இருப்பார்கள் இது பலரை குழப்பி கோதுமையில் செய்யப்பட்டுள்ளது என்பது போல் உருவம் செய்கிறார்கள்.

இதுபோலத்தான் சர்க்கரையின் என்பது என்ன பெயரில் இருந்தாலும் நீங்கள் உட்கொள்ளும் பொழுது தலை முதல் பாதம் வரை உங்களை கட்டாயம் இது பாதிக்கின்றது. 

Sugar Testing Machine

உங்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை தெரிந்துகொள்ள இந்த மெஷினை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

Too Much Sugar Vs உங்கள் மூளை

சர்க்கரை (Sugar) சாப்பிடுவது உங்கள் மூளைக்கு “டோபமைன்” எனப்படும் மகிழ்ச்சி தரக்கூடிய உணர்வை ஏற்படுத்துகிறது  இதனால் தான் நீங்கள் ஒரு ஆப்பிள் அல்லது கேரட் தரும்  ஆரோக்கியத்தை விட சாக்லேட்டை  அதிகமாக  விரும்பி சாப்பிடுகிறீர்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முழு உணவுகளும் உங்கள் மூளையில் டோபமைனை வெளியிடுவதில்லை என்பதால்,  பல நேரங்களில் நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்ட பின்பும் உங்கள் மூளை சில உணவுகளை உங்கள் நினைவிற்கு  கொண்டு வந்து உங்கள் ஆர்வத்தை தூண்டும் பின் இதை  உட்கொள்ள வேண்டும் என்பது போன்ற பிம்பத்தை உங்கள் மூளை ஏற்படுத்தும் அவற்றை அடக்குவது மிகவும் கடினம். 

Too Much Sugar

உங்கள் மனநிலை

சில நேரங்களில் உங்கள் உள்ளுணர்வு நீங்கள் மிட்டாய் அல்லது பிஸ்கட்களை சாப்பிடுவதன் மூலம் உங்கள் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி உங்களுக்கு விரைவான ஆற்றலை  கொடுப்பது போல் உணர்வீர்கள் அதே நேரம் உங்கள் செல்களில் சர்க்கரையை உறிஞ்சும் அளவு குறையும்போது நீங்கள் பதட்டமாகவும் கவலையாகவும் உணரலாம்

நீங்கள் அடிக்கடி சாக்லேட் சாப்பிட வேண்டும் அல்லது சர்க்கரை (Sweet) அதிகமாக சேர்க்கப்பட்ட பானங்கள் குடிப்பதால் உங்கள் மனதை உடலை உற்சாகப்படுத்துவது போல் இருக்கும் ஆனால் அடிக்கடி அதிக சர்க்கரை (Sugar) உட்கொள்வது பெரியவர்களில் மனச்சோர்வு ஏற்படும் அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

 

உங்கள் மூட்டுகள்

உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் நீங்கள் இனிப்பு சாப்பிடுவதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்வது நல்லது காரணம்  சர்க்கரை அதிகமாக பயன்படுத்துவதால்  உடலில் ஏற்படும் அழற்சியின் காரணமாக முடக்குவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

 

உங்கள் சருமம்

Too Much Sugar

சர்க்கரை அதிகமாக எடுத்துக் கொள்வது உங்கள் சருமத்தை விரைவாக வயதாகச் செய்யலாம். அதிகப்படியான சர்க்கரை உங்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள புரதங்களுடன் இணைகிறது மற்றும் “AGEs” எனப்படும் தீங்கு விளைவிக்கும் Glycation மூலக்கூறுகளை உருவாக்குகிறது அதாவது உங்கள் முகத்தில் நேர்த்தியான கோடுகள், சுருக்கங்கள், முகப்பரு, தாடை அல்லது ஜவ்ல் பகுதியில் தோல் தொய்வு, வறட்சி, மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் இதன் காரணமாக உங்கள் சருமத்தின் பொலிவை நீங்கள் இழந்து வயதான தோற்றத்தை பெறுவீர்கள்.

 

உங்கள் கல்லீரல்

அதிக அளவு சர்க்கரையில் பிரக்டோஸ் அல்லது அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் இருக்கலாம். பிரக்டோஸின் அதிகப்படியான நுகர்வு கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக அளவு பிரக்டோஸ் கல்லீரலை அடையும் போது, ​​கல்லீரல் அதிகப்படியான பிரக்டோஸை கொழுப்பு உருவாக்க பயன்படுத்துகிறது இதனால்  கல்லீரல் நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு  போன்றவற்றை உங்கள் உடலில் ஏற்படுத்தும்,  சில நேரங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட தேவைப்படும் அளவிற்கு செல்லலாம்.

Too Much Sugar Vs உங்கள் இதயம்

நீங்கள் அதிக சர்க்கரையை பயன்படுத்தி  சாப்பிடும் போதோ அல்லது குடிக்கும்போது இரத்தில் உள்ள கூடுதல் இன்சுலின் உங்கள் உடல் முழுவதும் உள்ள உங்கள் தமனிகளைப் பாதிக்கலாம். இது அவைகளின் சுவர்கள் வீக்கமடையவும், இயல்பை விட தடிமனாகவும் கடினமாகவும் மாற்றும். இது உங்கள் இதயத்துக்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் காலப்போக்கில் அதை சேதப்படுத்துகிறது.  இதனால் இதய செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும். 

குறைவான சர்க்கரையை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்றும்  ஆராய்ச்சிகள் கூறுகிறது, இது இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாகும். கூடுதலாக, அதிக அளவு சர்க்கரையை உண்பவர்கள் (குறைந்தது 25% கலோரிகள் சேர்க்கப்பட்ட சர்க்கரையிலிருந்து வரும்) இரத்த சர்க்கரை அளவு உயரும், இது டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோயால் இறக்கும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

Sugar

உங்கள் சிறுநீரகங்கள்

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அதிகப்படியான சர்க்கரை சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். உங்கள் இரத்தத்தை வடிகட்டுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரத்த சர்க்கரை அளவு ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன், சிறுநீரகங்கள் உங்கள் சிறுநீரில் அதிகப்படியான சர்க்கரையை வெளியிடத் தொடங்குகின்றன. கட்டுப்பாடில்லாமல் விட்டுவிட்டால், நீரிழிவு நோய் உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும், இது உங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டும் வேலையைச் செய்வதைத் தடுத்து நீங்கள் அடிக்கடி டயாலிசிஸ் செய்யும் நிலைக்குச் செல்ல வேண்டி வரும்.

 

Too Much Sugar Vs உங்கள் உடல் எடை

நீங்கள் எவ்வளவு அதிக சர்க்கரை பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிக எடை இருக்கும். சராசரியாக சரிவிகித உணவு உட்கொண்டு சர்க்கரையை குறைத்து உணவு எடுத்துக் கொள்பவர்களை விட  சர்க்கரையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் இரண்டு மாதங்களுக்குள்  சராசரியை விட 1.7  பவுண்டுகள் அதிகரித்ததாகக் கண்டறிந்துள்ளது இதன் காரணமாக உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரை உங்கள் கொழுப்பு செல்களை எரித்து எடை அதிகரிக்க செய்யும் ரசாயனங்களை  வெளியிடும் பணி அதிகரித்து விடுகிறது  இது டைப் 2  நீரிழிவு நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும்.

 

உங்கள் பாலியல் ஆரோக்கியம்

நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் இரவில் இனிப்பைத் தவிர்க்க விரும்பலாம். விறைப்புத்தன்மைக்கு தேவையான நிகழ்வுகளின் சங்கிலியை சர்க்கரை பாதிக்கலாம். இது உங்கள் இரத்த ஓட்ட அமைப்பை பாதிக்கிறது, இது உங்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

 

மேற்கண்ட கட்டுரையை படிக்கும் போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே முடிந்த அளவு சர்க்கரை  அல்லது இனிப்பு பொருட்களை பயன்படுத்துவதை  குறைத்துக் கொண்டு வாழ பழகிக் கொண்டால் உங்கள் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.

 

 

 

#how much sugar is too much #symptoms of too much sugar in your body #what happens when we eat too much sugar #side effects of too much  sugar #does eating too much sugar cause diabetes #eating too much sugar #12 signs you re eating too much sugar

Author

Author

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *