உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா…? என்ன செய்ய வேண்டும்…? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும்…?
பழைய தார் சாலையை புதுப்பிக்கும் முறை :
பழைய சாலைகளை மில்லிங் செய்து அகற்றப்பட்டு (அகழ்ந்து) எடுத்த பின்னர் தான் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். பழைய சாலையை அகழ்ந்து எடுத்த மூன்று நாட்களுக்குள், புதிய சாலை அமைக்கப்பட வேண்டும். பழைய சாலை அகழ்ந்து எடுக்கப்பட்டபிறகு ஐந்து நாட்கள் பின்னரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும்.
தரமில்லாத சாலை [ரோடு] புகார் மனு….!
அந்த தார் சாலை பற்றிய விபரங்களை உங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் / வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலர் /துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பணிகள் ) அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பி அந்த சாலை பற்றிய முக்கிய விபரங்களை பெற்று அதன் பின் புகார் மனு எழுதுங்கள்.
முக்கியமாக சாலை போடும்போது வீடியோ/புகைபட ஆதாரம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அனுப்புநர் :
உங்கள் பெயர் (ஊர் பொது மக்கள் சார்பாக
உங்கள் முகவரி.
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
XXXXXX மாவட்டம்.
உங்கள் புகாருக்கான அடிப்படை காரணங்கள் : ( GROUNDS OF MAKING COMPLAINT )
- தரமில்லாத தார் சாலையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு
அடைந்துள்ளனர் - தரமில்லாத தார் சாலையை போட்ட ஓப்பந்தகாரர் மீது
நடவடிக்கை எடுக்கவும். - தரமற்ற தார் சாலையை அமைக்கும் போது ஆய்வு செய்த
மேற்பார்வையாளர், சாலை பொறியாளர் ஆகியவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவும். - தரமற்ற தார் சாலையை ஆய்வு செய்த வட்டார துணை-வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்.
- தரமில்லாத தார் சாலையை சீரமைத்து தருமாறு
கேட்டுக்கொள்கிறோம். - பொது மக்களின் வரி பணத்தை தவறாக பயன்படுத்திய
அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, அதனை புகார்தாரர் ஆகிய எங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புகார் மனுவில் நகல் :-
- முதல் அமைச்சர் தனி பிரிவு , முகவரி.
- குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2 (7) இன் கீழ் உங்கள் வட்டத்திற்கு/தாலுக்கா க்கு உட்பட்ட மாஜிஸ்ட்ரேட் அவர்கள் முகவரி.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முகவரி.
- வட்டார வளர்ச்சி அலுவலர், XXXXXX வட்டார வளர்ச்சி அலுவலகம்.
குறிப்பு :-
தேவையான தகவல்களை முதலிலேயே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆவணங்கள் ஆதாரங்கள் பெற்றபின் அவைகளையும் இணைத்து புகார் அனுப்புவது நல்லது.