உச்சிஷ்ட கணபதி மந்திரம்
Uchishta Ganapathy Mantra
வெற்றியைத் தரும் உச்சிஷ்ட கணபதி மந்திரம்
ஒவ்வொரு மனிதரும் தம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் கனவாக உள்ளது ஆனால் இந்த உலகத்தில் போட்டி பொறாமை நிறைந்து இருப்பதால் வெற்றி என்பது பலருக்கு எட்டாக்கனியகின்றது. அதனால் அந்த எட்டாக்கனியை நம் மடியில் வெற்றிக்கனியாக விழுவதற்கு கங்கோல மகரிஷி ஒரு மந்திரத்தினை நமக்கு அருளியுள்ளார் அந்த மந்திரம் தான் உச்சிஷ்ட கணபதி மந்திரம்
நாம் எந்த ஒரு செயலையும் துவங்குவதற்கு முன்பாக பிள்ளையாரை வழிபட்டு தொடங்க வேண்டும், இது சிவபெருமான் பிள்ளையாருக்கு கொடுத்த வரம்.
தியானத்திற்கு பிறகு மந்திர ஜெபம்
இந்த மந்திரத்தை ஜபிப்பதற்கு முன்பு நன்கு கற்றறிந்த குருநாதர் மூலமாக உபதேசம் பெற்ற பிறகு நாம் உச்சரிக்க வேண்டும். அல்லது உங்கள் வீட்டில் வைதீக காரியங்கள் நடத்திக் கொடுக்கும் குருக்கள் அல்லது சாஸ்திரிகள் எவரேனுக்கும் இந்த மந்திரம் தெரிந்திருந்தால் அவர்கள் மூலமாக இந்த மந்திரத்தின் உபதேசம் பெறலாம்.
மந்திரம் சொல்லத் துவங்கும் முன் அங்க நியாஸம், கரந் நியாஸம் செய்து கொண்டு
மூன்று கண்களும்,
நான்கு திருக் கரங்களும்,
சிவந்த தேக காந்தி உள்ளவரும்,
வலது மேற்கரத்தில் அங்குசம்,
வலது கீழ்க்கரத்தில் தந்தம்,
இடது மேற்கரத்தில் பாசம்,
இடது கீழ்க் கரத்தில் மோதக பாத்திரம் ஆகியவற்றை ஏந்திய வரும்,
மதோன்மத்தனாக தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவருமான வசிய கணபதியை துதிக்கிறேன்.
என்ற தியான ஸ்லோகம் சொல்லி தியானித்த பின் உச்சிஷ்ட கணபதியின் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
வழிபாடு செய்வது எப்படி
இந்து மந்திரத்தை தேய்பிறை சதுர்த்தசியன்று துவங்கி வளர்பிறை சதுர்த்தசி வரை சொல்ல வேண்டும். தினமும் பாராயணம் செய்த பின்பு பிள்ளையாருக்கு பாயசம் நைவேத்தியம் செய்வது வேண்டும்.
வேப்பமர கட்டையில் பிள்ளையார் திருவுருவம் செய்து வழிபட சத்துருக்களை வெல்லலாம்.
மஞ்சளில் விநாயகர் உருவம் செய்வது போல, வெல்லத்தை பயன்படுத்தி பிள்ளையார் உருவம் செய்து வழிபட வாழ்வில் அபிவிருத்தி உண்டாகும்.
உச்சிஷ்ட கணபதி மந்திரம்
உச்சிஷ்ட கணபதி விநாயக
என் விக்னமெல்லாம் நீ தீர்ப்பாய்
தும்பிக்கையால் என்னை நீ அணைக்க
என் அஞ்ஞானம் தீர்ந்து நான் எனை மறக்க
எப்போதும் அருள் செய்வாய் விநாயகா
எல்லோரும் போற்றும் விநாயகா!
ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
ஓம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
கம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
ஓம் நம: உச்சிஷ்ட கணேசாய
ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா
உங்களால் குரு உபதேசம் மீதும் பெற முடியவில்லை என்றாலும் மேற்கண்ட விநாயகர் மந்திரத்தை தினமும் ஆயிரம் முறை உள்ளம் உருகி கணபதியை வழிபட துவங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை !