விவசாயம்

பால் பண்ணை வணிகம் எப்படி வெற்றி பெறுகிறது ?

55 / 100

பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும். கால்நடைகளினால் கிடைக்கும் எரு உரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது. கால்நடைகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாண எரிவாயு வீட்டு உபயோகத்திற்கு எரிபொருளாக மட்டுமின்றி கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் இன்ஜீன்களுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது.

வேளாண்மையின் உபரி பொருள்களான உப பொருள்களே கால்நடைகளுக்கான இலாபகரமான தீவனமாக அமைகிறது. பெரும்பாலும் பண்ணை செயல்பாடுகளுக்கும், போக்குவரத்துக்கும், அதிக அளவில் எருதுகள் பயன்படுகின்றன. ஆரம்பத்திலிருந்தே வேளாண்மை சார் தொழில்களில், பெரும்பாலான வேலைவாய்ப்பும், இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாக பால் பண்ணை அமைகிறது.

பால் பண்ணை வருடம் முழுவதும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. பால் பண்ணை மூலம் முக்கியமாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் பயனடைகின்றனர்.  இரண்டு கறவை மாடுகளினால் ஒரு விவசாயிக்கு  ஒரு வருடத்திற்கு  கிடைக்கும் மொத்த உபரி தொகை 12,000 ரூபாய்.  இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்கு தேவைப்படும் முதலீடு தொகை ரூ.18,223/- அதன் பிறகு வருடத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய கடன் தொகை ரூ.4,294/- ஆனால் விவசாயிக்கு கிடைக்கும் நிகர லாபம் தோராயமாக ரூ.6000 – 9000. கால்நடைகளின் தரம், பராமரிக்கப்படும் முறை, விற்பனை திறன் இவற்றைப் பொருத்தே கிடைக்கக்கூடிய வருமானம் அதிகரிக்கும்.

பால் உற்பத்திக்கு பொதுவாக வழங்கப்படும் பயிற்சிகள்

பால் பண்ணையின் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாகரிக மற்றும் சிறந்த அறிவியல் கொள்கைகள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் பயன்படுத்தப்படும் வேறு சில பயிற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டமைப்பு

  • கால்நடை வளர்ப்பிற்கான கூடாரம் ஈரப்பதம் இன்றி வறட்சியாக அமைக்க வேண்டும்.
  • அடைமழை போன்ற பெரு மழையின் போது நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கூடாரம் அமைக்க தவிர்க்க வேண்டும்.
  • இதனுடைய சுவர்கள் 1.5 வழ 2 மீ உயரம் இருக்க வேண்டும்.
  • இந்த கூடாரத்தின் சுவர்கள் ஈரம் கசியாத வண்ணம் பூசியிருக்க வேண்டும்.
  • இதன் கூரை 3-4 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
  • இந்த மாட்டு தொழுவம் சிறந்த காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.
  • இந்த தரை சரியான / கடினமான, வழுக்காத, சிறந்த முறையாக (3 செ.மீ) நீர் வடிய கூடிய முறையில் எளிதில் உலரும் படியாகவும் சரிவாக அமைக்க வேண்டும்.
  • வளர்க்கப்படும் கால்நடைகள் நிற்கும் இடமானது 0.25மீ அளவில் சரியான அகன்ற வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 2×1.05 மீ ஆகும்.
  • கால்நடைகளுக்கான தீனி தொட்டி 1.05 மீட்டர் இடத்திலும் அதன் முன் உயரம் 0.5 மீ மற்றும் அதன் ஆழம் 0.25 மீட்டர் அளவிலும் இருக்க வேண்டும்.
  • தீவனத் தொட்டி, தண்ணீர் தொட்டி, வடிகால் வசதி மற்றும் சுவர்கள் இவைகள் யாவும் எளிதில் தூய்மை படுத்தும் வண்ணம் அமைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 5- 10 ச.மீட்டர் அளவில் ஒதுக்கீட செய்ய வேண்டும்.
  • வெயில் காலங்களில் முறையான நிழல் மற்றும் குளிர்ந்த நீரை கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
  • குளிர்காலத்தில் இரவு நேரத்திலும், மழையிலும் கால்நடைகளை வீட்டிற்குள் பராமரிக்க வேண்டும்.
  • நாள்தோறும் கால்நடைகளுக்கு தனித்தனி  கிடைப்படி ஓதுக்க வேண்டும்.
  • கூடாரம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும்.
  • வெளிப்புற ஒட்டுண்ணிகளான (பேன், ஈக்கள் ) இவற்றிலிருந்து காக்க சுவர்களுக்கு மாலத்தியான அல்லது காப்பர் சல்பேட் தெளிக்க வேண்டும்.
  • கால்நடைகளின் சிறுநீர் சிறு குழிகளில் சேகரிக்கப்பட்டு பின் அதை பாசனக் கால்வாயில் சேர்க்க வேண்டும்.
  • கால்நடைகளின் சாணம் மற்றும் சிறுநீரை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சாண எரிவாயு கலனை சிறந்த முறையில் அமைக்க வேண்டும். சாண எரிவாயு கலன் என்பது சாணத்துடன் பண்ணை கழிவுகள் கால்நடை கழிவுகளை சேர்த்து தயாரிப்பதாகும்.
  • கால்நடைகளுக்குத் தேவையான இடைவெளி ஒதுக்க வேண்டும்.

கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை

  • வங்கி கடன் கிடைத்தவுடன் தகுந்த கால்நடை வளர்ப்பவரிடமிருந்தோ அல்லது அருகிலுள்ள கால்நடை சந்தையிலோ கால்நடைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
  • வங்கியின் தொழில்நுட்ப அலுவலரின் உதவியால் ஆரோக்யமான மற்றும்  அதிகபடியான பால் தரும் கால்நடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர்/ கால்நடை வளர்ப்பு பராமரிப்பவர் மாநில அரசு/வட்டார.
  • புதிதாக இரண்டாவது/மூன்றாவது கன்றுகுட்டி ஈன்ற பசுவை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
  • வாங்குவதற்கு முன் கறவை மாட்டின் பால் வளம் மற்றும்  மூன்று முறை பால் கறக்கும் திறன் உடையதா என நன்கு ஆராய்ந்தறிந்து வாங்க வேண்டும்.
  • புதிதாக  வாங்கிய கறவை மாட்டை அடையாளம் காண்பதற்கு தகுந்த அடையாளக் குறியிட வேண்டும். (காது குத்தல் (அ) பச்சை குத்துதல்)
  • புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.
  • புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டை முதல் இரண்டு வாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். பிறகு அதை மற்ற மாடுகளுடன் ஒன்றாக சேர்க்கலாம்.
  • குறைந்த பட்ச பொருளாதார வளத்திலேயே இரண்டு பால் தரும் கறவை மாடுகளை வாங்க வேண்டும்.
  • வாங்கக்கூடிய இரண்டாவது கறவை மாடு/ கறவை மாடு தொகுப்பு முதலில் வாங்கிய கால்நடைகளுக்கு 5-6 மாதம் கழித்து வாங்க வேண்டும்.
  • பருவகாலத்திற்கேற்ப வளாப்பவரிடமிருந்து எருமை மாடுகளை ஜீலை-பிப்ரவரி மாதங்களில் வாங்க வேண்டும்
  • இரண்டாவதாக வாங்கப்படும் கால்நடையானது ஏற்கனவே உள்ள கால்நடையின் பால் வளம் வற்றும் போது அல்லது குறையும் போது வாங்கினால் தொடர்ந்து பாலின் உற்பத்தி சீராக இருக்கும். மேலும் இது தொடர் வருமானத்திற்கும், பால் வற்றிய மாட்டினை பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
  • பால் வளம் குன்றிய கால்நடையை ஆராய்ந்து அதற்கு பதிலான கால்நடையை வாங்க வேண்டும்.
  • தரம் குறைந்த மாட்டை அது 6-7 முறை கன்று ஈன்ற பிறகு நீக்கி விட வேண்டும்.

 

கறவை மாடுகளுக்கான உணவளித்தல்

  • கறவை மாடுகளுக்கான தீவனம் சிறந்ததாக இருக்க வேண்டும். (தீவன பட்டியல் அட்டவணை vIII தரப்பட்டுள்ளது)
  • ஒரு நாளிற்கு போதுமான அளவில் பசுந் தீவனம் வழங்க வேண்டும்.
  • கூடுமானவரை நம் நிலத்தில் வளரக்கூடிய பசுந்தீவனம் அல்லது எங்கு கிடைக்குமோ அங்கிருந்து பெற்று தரவேண்டும்.
  • பசுந்தீவனத்தை அதனுடைய சரியான வளர்ச்சியில் வெட்ட வேண்டும்.
  • மேய்ச்சல் தீனி வழங்குவதற்கு முன் நார் உணவான நெல் பதர்களை வழங்க வேண்டும்.
  • தானியங்களை நொறுக்கி அடர்  தீவனமாக வழங்க வேண்டும்.
  • எண்ணெய் புண்ணாக்கு கரகரப்பாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்க வேண்டும்.
  • ஈரமாக்கப்பட்ட அடர் தீவனத்தை உணவளித்தலுக்கு முன் வழங்க வேண்டும்.
  • போதுமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் தரவேண்டும் கனிம கலவையுடன் போதுமான அடர் உணவுகள் தாது உப்புகளையும் தரவேண்டும்.
  • போதுமான மற்றும் சுத்தமான நீர் வழங்க வேண்டும்.

 

கால்நடைகளிடம் பால் கறத்தல்

  • ஒரு நாளைக்கு 2-3 முறை பால் கறக்க வேண்டும்.
  • பால் கறக்க குறிப்பிட்ட நேரத்தை தேர்பு செய்ய வேண்டும்.
  • ஒரு முறை பால் கறப்பதற்கு எட்டு நிமிடங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கூடுமானவரை வழக்கமாக பால் கறப்பவரே பால் கறக்க வேண்டும்.
  • பால் கறக்க சுத்தமான இடத்தை பயன்படுத்த வேண்டும்.
  • மாட்டின் மடி மற்றும் காம்புகளை கிருமிகளை தடுக்கும் மருந்து கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பால் கறப்பதற்கு முன் மிதமான சூடான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • பால் கறப்பவருக்கு ஏதேனும் தொற்று நோய் இருந்தால், நோய் கிருமிகளை தடுக்கும் மருந்துகளை கொண்டு அவருடைய கைகளை ஒவ்வொருமுறை பால் கறக்கும் போதும் சுத்தப்படுத்த வேண்டும்.
  • பால் கறப்பதற்கு முழுகைகளை பயன்படுத்தி வேகமாகவும், முழுமையாகவும் காம்புகளை உருவி கறக்க வேண்டும்.
  • நோய் வாய்ப்பட்ட பசு / எருதுவின் பால் கறப்பதற்கு முன் நோய் பரவாமல்  இருக்க தடுப்பு மருந்து அளித்த பிறகே பால் கறக்க வேண்டும்.

 

நோய்க்கு எதிரான தடுப்பு முறைகள்

  • கால்நடைகள் நோய்வாய்ப்பட்ட அறிகுறியாகவோ, உணவு உட்கொள்ளுதல் குறைவாக, காய்ச்சல், வழக்கத்திற்கு மாறான கலைப்புடன், வழகத்திற்குமாறான நடவடிக்கையுடன் காணப்பட்டால் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும்.
  • நோய்வாய்ப்பாட்டிருப்பதாக எண்ணினால் அருகில் உள்ள கால்நடை மருத்துவ உதவி மையத்தை அணுகி உதவி கோரலாம்.
  • பொதுவாக கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு எதிராக கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்.
  • ஒரு வேளை எதிர்பாராமல் ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால், உடனடியாக நோய் தாக்கப்பட்ட கால்நடையை மற்ற ஆரோக்யமாக உள்ள கால்நடைகளிடமிருந்து தள்ளி ஒதுக்கி வைக்க வேண்டும். மற்றும் தேவையான நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். (நோய் தடுப்பு முறை பட்டியல்கள் அட்டவணை IX  ல் தரப்பட்டுள்ளது)
  • புரூசெல்லா நோய், எலும்புருக்கி நோய், மடியழற்சி நோய் போன்ற நோய்களுக்கு சரியான கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • குடற்புழு நீங்க மருந்துகளை தவறாமல் வழங்க வேண்டும்.
  • கால்நடைகளை ஒவ்வொரு நேரமும் சுத்தப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும்.

இனப்பெருக்க  கால பராமரிப்பு

  • கறவை மாடுகளின் சினைப் பருவ அறிகுறிகள், கருவூட்டல், கருத்தரித்தல் மற்றும் கன்றுகள் பற்றிய முழு விபரம் கூர்ந்து கவனித்து தனிப்பட்ட ஏடுகளில் பதிவு செய்து வைக்க வேண்டும்.
  • சரியான சினைப்பருவத்தில் கருவூட்டம் செய்திடல் வேண்டும்.
  • கன்று ஈன்ற 60-80 நாட்களுக்குள் ரத்தக்கசிவு நிற்க வேண்டும்.
  • கன்று ஈன்ற 2-3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கருவூட்டம் செய்யலாம்.
  • சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்த 12லிருந்து 24 மணி நேரத்திற்குள்ளாக கருவூட்டம் செய்யப்பட வேண்டும்.
  • தரமான உயர்ரக காளைகளின் உறை விந்துக்களை கருவூட்டம் செய்ய பயன்படுத்த வேண்டும்.
  • VII. கறவை மாடுகளின் கருவுற்றகால பராமரிப்பு
  • கருவுற்றிருக்கும் கறவை மாட்டிற்கு அதுகன்று ஈனுவதற்கு முன், முதல் 2 மாதங்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி தேவையான இடவசதி, உயவு, நீர் போன்றவை வழங்கப்பட வேண்டும்.

பால் விற்பனை செய்தல்

  • பால் கறந்த உடனடியாக அதை விற்பனை செய்ய வேண்டும். பால் கறப்பதற்கும் அதை விறபனை செய்யவதற்கும் இடையே மிக குறைந்தபட்ச நேரமே இருக்க வேண்டும்.
  • பால் கறப்பதற்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மிகவும் தூய்மையானதாக  பயன்படுத்த வேண்டும்.
  • பால் கறப்பதற்காக பயன்படுத்தப்படும் வாளி/கேன் / பாத்திரங்கள் நன்றாக சலவைத்தூள் கொண்டு தேய்த்து மற்றும் இறுதியாக குளோரைடு நீர்மம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • பாலை எடுத்துச் செல்லும்போது அதிகப்படியான குலுங்கலை தவிர்க்க வேண்டும்.
  • பாலை மற்றொரு ஊருக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது அதை ஒரு நாள் முழுவதும் குளிரூட்டியில் பதப்படுத்த வேண்டும்.

 

கன்று குட்டிகளை பராமரித்தல்

  • புதிதாக பிறந்த கன்றை மிகவும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.
  • தொப்புள் கொடியை கூர்மையான கத்தி கொண்டு வெட்ட வேண்டும். அதே சமயத்தில் நோய் தொற்று தாக்காமல் இருக்க அயேடின் சாராயக் கரைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • கன்றிற்கு சீம்பாலை கண்டிப்பாக தரவேண்டும்.
  • கன்று பிறந்த 30 நமிடத்தில் முலைப்பாலூட்ட வேண்டும். கன்று மிகவும்  தளர்ந்த நிலையில் இருந்தால் பால் குடிக்க உதவ வேண்டும்.
  • கன்று பிறந்த உடனே முலைப்பால் குடிக்க மறுத்தால் பிறகு அதை குடிக்க வைப்பதற்காக முலைப்பாலை பக்கெட்டில் சேமிக்க வேண்டும்.
  • கன்று பிறந்த 2 மாதத்திற்கு அதை தனியாக வறண்ட சுத்தமான மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் பராமரிக்க வேண்டும்.
  • அதிகபடியான சீதோஷ்ண நிலையிலிருந்து கன்றை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அதுவும் முதல் 2மாத கன்றை நன்கு பராமரிக்க வேண்டும்.
  • கன்றுகளை அதன் பரிமாண அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.
  • கன்றுகளுக்கு தடுப்பு மருந்துகளை தர வெண்டும்.
  • கன்று பிறந்த 4-5 நாட்களுக்குள் அதற்கு கொம்பு வெட்டி சீர் செய்ய வேண்டும். வளர வளர அதை கையாளுவது சுலபமாக இருக்கும்.
  • தேவைக்கு அதிகமாக வளர்க்க முடியாத கன்றுகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். ஏதேனும் தனிப்பட்ட காரணத்திற்காக பராமரிக்க வேண்டியிருந்தால் பராமரிக்கவும், குறிப்பாக காளை கன்றுகளை.
  • பசு கன்றுகளை தகுந்த முறையில் வளர்க்க வேண்டும்.

Author

Benqu Support

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விவசாயம்

தரிசு, களர், உவர் நிலங்களுக்கு மானிய உதவி

67 / 100 Powered by Rank Math SEO ஒரு சில கிராமங்களில், சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன.
விவசாயம்

வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்

56 / 100 Powered by Rank Math SEO வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய
Exit mobile version